பிலிப்பைன்சில் நேற்றுமுன்தினம் ஒரு நகர மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் நேற்றையதினமும் மேலும் ஒரு மேயர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிலிப்பைன்சில் போதைப்பொருள் கடத்தலகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கும் அந்நாட்டின் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சுமார் ஏழரை லட்சம் பேர் சரண் அடைந்துள்ளதுடன் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் காவல்துறையினரின் தேடுதல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மின்டானாவோ என்னும் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த டட்டு சவுதி அம்பட்டுவான் நகர மேயரான சம்சுதீன் டிமாவ்கோம் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட சுமார் 4,200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பட்டாங்காஸ் மாகாணத்தின் டனுவான் நகர மேயர் அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின்போது அந்நகரின் மேயர் அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி இனந்தெரியாதேரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முன்னதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களை தெரு வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து நேற்றையதினம் நுயேவா எகிஜா என்ற மாகாணத்தின் தலைநகரில் காரில் சென்று கொண்டிருந்த நகர மேயரான 57 வயதான பெர்டினாண்ட் போட்டே என்பவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்