தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலமத்தின் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று இந் தீவிபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலையினுள் 15 பேர் இருந்துள்ள நிலையில் பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவர் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளது;ன மேலும் மூவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் . தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தீ விபத்து குறித்து தொழிற்சாலையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.