சினிமா

வேட்டை நாயை வெளியிடும் விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி


விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து  ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டை நாய்’ படத்தின் முன்னோட்டத்தை  (டீசர்) நாளை வெளியிடவுள்ளனர்.  பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். இப் படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்ற ஆர்.கே.சுரேஷ் ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தற்போது இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இதில் ‘வேட்டை நாய்’ படத்தின் முன்னோட்டத்தை ஜூலை 5ம் தேதி 3 பிரபலங்கள் இணைந்து வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து இப்படத்தின் முன்னோட்டத்தை நாளை மாலை 4.30 மணியளவில் வெளியிடவுள்ளனர்.

வேட்டை நாய் படத்தை எஸ்.ஜெய்சங்கர் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘மன்னாரு’ படத்தை இயக்கியுள்ளார். நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.