தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ளது. கடுமையான வாக்குவாதங்களுக்குப் பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜனாதிபதி பதவியில் ஜேக்கப் ஜூமா நீடிக்க கூடாது என 126 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீடிக்க வேண்டும் என 214 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த பத்தாம் திகதி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் அவருக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜேக்கப் ஜுமாவை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் டெரெக் ஹனேகோம் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை தாக்கலும் செய்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாகவும், ஜேக்கப் ஜுமா வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதனையடுத்து, அந்நாட்டின் ஜனாதிபதியாகவும், ஆளும்கட்சியின் தலைவராகவும் அவர் தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.