ஜப்பான் நாட்டில் சுரங்கப்பாதை ஒன்றில் நச்சு வாயு தாக்குதல் மேற்கொண்டு 13 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஓம் ஷினிக்யோ என்ற ஆன்மீக குழுவின் தலைவரான ஷோகோ அசஹரா உள்ளிட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
1995ஆம் ஆண்டு உள்ள டோக்கியோவில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்திருந்தனர். இந்த சம்பவத்தில் 63 வயதான தலைவரான ஷோகோ அசஹராவுக்;கும் , அவரது குழுவை சேர்ந்த 6 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
ஆவர்கள் இந்தக் குறிறச்சாட்டினை மறுத்தி போதிலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதனையடுத்து இதையடுத்து 2004-ம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்படிருந்தது.
இந்த நிலையில், அசஹரா உட்பட்ட 7 பேரும் நேற்றையதினம் டோக்கியோ சிறையில் வைத்து ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் ஆன்மீக குழு ஒன்றின் தலைவருக்கு மரண தண்டனை
Jul 6, 2018 @ 03:04
ஜப்பானில் ஓம் ஷினிக்யோ என்ற ஆன்மீக குழு ஒன்றின் தலைவரான ஷோகோ அசஹரா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு உள்ள டோக்கியோவில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்த சம்பவம் தொடர்பிலேயே இவருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது
ஓம் ஷினிக்யோ என்ற இந்த ஆன்மீக குழு இந்து மற்றும் பௌத்த மத நம்பிக்கைகளை சேர்க்கும் வகையில் 1980களில் ஆரம்பிக்கப்பட்டது .பின்னர் இந்த ஆன்மீக குழுவின் தலைவர் ஷோகோ அசஹரா தன்னை இயேசு என்று அறிவித்து கொண்டதோடு, புத்தருக்கு பின்னர் ஞான ஒளி பெற்றவர் என தன்னை அழைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது