தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இடம்பெற்ற பேரணியின் போது பொதுமக்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் 2 நீதிபதிகள் அமர்வு விசாரணை மேற்கொள்கின்றது.
இந்தக் காவல்துறையினரின் துப்பாக்கி சுட்டின் போது 13 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காமடைந்திருந்தநிலையில் இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையக குழு நேரடி கள ஆய்வில் ஈடுபட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில், அதிகப்படியான மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டியதை அடுத்து ஆணையகத்தின் 2 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த மாதமே விசாரணை தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுடன் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மிக முக்கியமான வழக்குகளை மட்டுமே ; தேசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் 2 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.