பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நவாஷ் ஷெரீப் மற்றும் மரியம் ஆகியோர் ஹெலிகொப்டர் மூலம், இஸ்லாமாபாத்திலுள்ள அதியாலா சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- கட்சி தலைவர்கள் பலரையும் கலவரங்களை முன்னெடுப்பார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் இன்று கைது
: Jul 13, 2018 @ 03:41
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் இன்று கைது செய்யப்படவுள்ளதுடன் அவர்களை அடியலா சிறையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பில் கடந்த வருடம் அந்நாட்டு உச்சநீதிமன்றினால் பதவிநீக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரீப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில் லண்டனில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷெரீப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என முடிவு செய்த நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், கப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்திருந்தது.
இந்தநிலையில் தற்போது லண்டனில் தங்கியிருந்த நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாசுடன் இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்புவதகவும் அவர்களை விமானநிலையத்தில் வைத்தே கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்டன் சப்தார் ஏற்கனவே அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.