வட்ஸ் அப், முகப்புத்தகம் , ருவிட்டர் , யூரியுப், உள்ளிட்ட சமூக வலைதள தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்க திட்டமிட்டுள்ளமை குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது . சமூக வலைதளங்களைக் கண்காணிக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை திட்டமிட்டு அதற்காக சமூக வலைதள தகவல் மையம் என்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்தத்திட்டத்தின் மூலம் அரசை விமர்சனம் செய்பவர்கள் குறிவைக்கப்படுவார்கள் எனவும் மத்திய அரசின் முடிவு மக்களின் அடிப்படை பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரானது என்பதனால் ஜனநாயகம் கேள்விக்குறியாகும். மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு மறைமுகமாக பறிக்க முயற்சி செய்கிறது என மனுவில்குறிப்பிடடிருந்தார்.
மனுவினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது குறித்து ஓகஸ்ட் 3-ம் திகதிககுள் மத்திய அரசு விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்துள்ளது