163
சிலியில்; ரோமன் கத்தோலிக்க திருச்சபை அலுவலகங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். திருச்சபையில் நடந்த பாலியல் துஷ்பிரயோகம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் இந்த சோதனை நடவடிக்கையின் போது பல ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுக்கோ மற்றும் வில்லாரிகா ஆகிய நகரங்களில் உள்ள திருச்சபைகளிலேயே இவ்வாறு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இங்குள்ள திருச்சபை ஆயர்கள், விசாரணை அதிகாரிகள் கேட்ட தகவல்களைக் கொடுக்க மறுத்தமையில் மேற்படி சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறைத் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love