இணைய வரலாற்றில் கியூபாவில் முதன் முறையாக கைத்தொலைபேசியில் இணையம் பயன் படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டு கால இணைய வரலாற்றில் பல மாற்றங்களை கண்டிருக்கும் கியூபா தற்போதுதான் முழு இணைய சேவை வசதியை பெற உள்ளது.
அமெரிக்காவை விட பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்த கியூபா சோவியத் ரஷியா உடைந்த சில மாதங்களில் பெரிய பாதிப்பை சந்தித்தது. எதிரி நாடான அமெரிக்காவின் கெடு பிடியால் கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் உள்ளமையினால் அங்கு தற்போது இங்கு 2ஜி இணைய வசதிகள் மட்டுமே உள்ளதனால் கைத்தொலைபேசியில் இணைய சேவையை பயன்படுத்த முடியாது
மேலும் அங்கு தொலை தொடர்பு சாதனங்களை விற்க அமெரிக்கா கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தநிலையில் தற்போது கைத்தொலைபேசியில் இணைய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது