பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
சுமார் 107 அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் விடுதலை தொடர்பில் பிரதமருடனும் எதிர்க்கட்சி தலைவருடனும் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்த போது, இது குறித்து அவரிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.