Home இலங்கைமத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதில் நியாயம் இல்லை…

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதில் நியாயம் இல்லை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்காக மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது எந்த வகையிலும் நியாயமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கியது. இதனால், இந்தியாவை சமாளிக்க மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டது என்ற காரணத்திற்காக மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது எந்த வகையிலும் நியாயமில்லை எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More