அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு ஒன்று ஏரியில் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் சிலரைக் காணவில்லை. மிசவுரி மாகாணத்தின் பிரான்சன் பகுதியில் உள்ள் சுற்றுலா பயணிகளுக்கு உகந்த ரேபிள் லொக் (Table Rock Lake) என்னும் ஏரியில் நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு இடைவெளியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்ப்புப்படையினர் 7 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதுடன் உயிரிழந்த 8 பேரின் உடல்களையும் மீட்டுள்ளனர். மேலும், மூழ்கி காணாமல் போயுள்ள ஏனையோரை தேடும் பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.