மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடந்து வரும் நிலையில், இது தொடர்பான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ( No Confidence Motion) மற்றும் ராகுல் காந்தி (R+RahulGandhi) ஆகிய இரு ஹாஷ்டேக்குகள் உலக அளவில் பிரபல்யமாகி உள்ளன.
பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று காலை முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், சமூக வலைத்தளமான ருவிட்டரில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பலரும் கருத்து கூறி வருவதால், நம்பிக்கையில்லா தீர்மானம் (NoC onfidence Motion ) என்ற ஹாஷ்டேக் உலகளவில் பிரபல்யம் ஆகியுள்ளது. சுமார் 3 லட்சம் ருவீட்டுகள் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ளன.
அதேபோல், ராகுல் காந்தி (R+RahulGandh) என்ற ஹாஷ்டேக்கும் உலகளவில் பிரபல்யம் ஆகியுள்ளது. ராகுல்கந்தி இன்று மக்களவையில் பேசிய பேச்சு மற்றும் அவர் மோடியை கட்டியணைத்து வாழ்த்து பெற்றது போன்ற செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் ருவிட்டுகள் ராகுல் காந்தியை மையப்படுத்தி பதிவிடப்பட்டுள்ளன.