தென்கிழக்கு லாவோசில் புதிதாக கட்டப்பட்டு வந்த அணை ஒன்று இடிந்ததில் 6 கிராமங்கள் நீரில் மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காணமால் போயுள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணையின் கட்டுமானப்பணிகளின் பெருமளவான பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அடுத்த வருடம் திறப்பதாக இருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை அணையின் ஒருபகுதி இடிந்து விழுந்ததனால் அதில் , தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெள்ளமாக பாய்ந்து 6 கிராமங்களை மூழ்கடித்துள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன் சுமார் 6600 பேர் வீடுகளை இழந்துள்ளனர் எனவும் அவர்கள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருவதமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது