Home இலங்கைஒரு லட்சம் ரூபா வரையான நுண்கடன் தொகையை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

ஒரு லட்சம் ரூபா வரையான நுண்கடன் தொகையை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

by admin


ஒரு லட்சம் ரூபா வரையான நுண்கடன் தொகையை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கேற்ப, நிதி நிறுவனங்களால் பெண்களுக்கு வழங்கப்பட்ட நுண்கடன் தொகையில் ஒரு லட்சம ரூபா வரையான தொகையை ரத்து  செய்வதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் வழங்கப்படும் அனைத்து கடன்களுக்கான வட்டி வீதத்தை ஆண்டொன்றிற்கு 30 சதவீதத்திற்கு இடைபட்டதாக அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கே இந்த விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகியவை 12 மாவட்டங்கள் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More