குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர்களில் துபாய் மற்றும் ஹொங்கொங் வங்கிகளில் இருக்கும் கணக்குகள் தொடர்பான சகல தகவல்களும் கிடைத்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை பெற்றுக்கொள்ள ராஜதந்திர நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினரின் பெயரில் துபாயில் உள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் 1086 மில்லியன் டொலர் உள்ளதுடன் மற்றுமொரு கணக்கில் சுமார் 500 மில்லியன் டொலர் இருக்கின்றது. அத்துடன் அவர்களுக்கு நெருக்கமான முன்னாள் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களின் பெயர்களில் மேலும் 1800 மில்லியன் டொலர்கள் உள்ளன.
அதேபோல் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள வங்கிக்கணக்குகளின் விபரங்களையும் அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது.இந்த நாடுகளில் இருக்கும் பணத்தை நாட்டுக்கு கொண்டு வருவது மிகவும் சிரமமான காரியம். எனினும் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளது எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
1 comment
Ha ha ha though is these guys are Sri Lankan or those countries citizen????? having huge sums in those countries bank account.