கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 பேரை காணவில்லை என்பதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
காற்று வேகமாக வீசுவதால், நெருப்பு சூறாவளி உருவாகி மரங்களை வேரோடு சாய்வதாகவும் வாகனங்கள் அடித்து செல்லப்படுவதாகவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை ஐந்து சதவீத பகுதியில் பரவியுள்ள இந்த தீயைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
கடந்த திங்கள்கிழமை ஆரம்பமாகிய இந்த காட்டுத்தீ 48 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. எதிர்வரும் வாரத்தில் வறண்ட காலநிலை நிலவும் என்பதால் தீப்பரவல் இன்னும் மோசமாகக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை இந்த தீப்பரவல் காரணமாக அங்கு தீயணைப்பு வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது