152
இரகசியமாக வைத்திருக்க வேண்டிய இராணுவத் தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி லெ.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா தெரிவித்துள்ளார்.
இராணுவ இரகசியங்களை ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அறிந்துகொள்ளச் செய்வது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இராணுவ இரகசியங்கள் வெளியாவதன் மூலம் இராணுவ செயற்பாடுகள் பாதிக்கப்படும் என இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இது குறித்த உள்ளக சுற்றறிக்கையை கடந்த வாரம் இராணுவ கட்டளைத் தளபதிகளுக்கு இராணுவத் தளபதி அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Spread the love