Home இலங்கைபல்கலைகழக மாணவர்கள் படுகொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பல்கலைகழக மாணவர்கள் படுகொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

by admin


குளோபல்தமிழ்ச் செய்தியாளர்

பல்கலைகழக மாணவர்கள் படுகொலை சந்தேகநபர்களை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதிஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஐந்து சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
கடந்த ஒக்ரோபர்மாதம் 20ம் திகதி இந்த இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த மாணவர்கள் விபத்துக்குள்ளாகி கொல்லப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் பிரேதப் பரிசோதனையின் போது மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை கண்டறியப்பட்டதனைத் தொடர்ந்து  இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More