Home உலகம்மெக்சிக்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் 85 பேர் காயம்

மெக்சிக்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் 85 பேர் காயம்

by admin

மெக்சிக்கோவின் தலைநகரில் உள்ள டுரங்கோவில் நடந்த விமான விபத்தில் 85 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தானது விமானநிலையத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் நடைபெற்றுள்ளது.

97 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் உள்பட 101 பேருடன்; விக்டோரியா சர்வதேச விமானநிலையத்திலிருந்து மெக்சிக்கோ நகரை நோக்கி புறப்பட்ட ஏரோமெக்சிகோ எனும் விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே தீப்பிடித்து விபத்துக்குள்ளகி எரிந்துள்ளது.  இந்த விபத்தில் 85 பேர் காயமடைந்த நிலையில் 37 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

விமானம் புறப்படும் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் புறப்பட்ட சில வஜநாடிகளிலேயே விபத்து ஏற்பட்டதால், விமான நிலையத்திற்கு அருகே உள்ள பகுதியில் விமானம் அவசர அவசரமாக தரையிறப்பட்டதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More