161
இஸ்ரேலிய அரபு கவிஞரான டாரீன் ரற்ரூர் (Dareen Tatour ) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையை தூண்டுவதாகவும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை ஆதரிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டடே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அரபுக்கவிஞருக்கு ஐந்து மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் இணையத்தில் பகிர்ந்த சில கருத்துகள் மற்றும் கவிதைகள் வன்முறையை தூண்டும் விதமாக காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த ரற்ரூர் தன்னுடைய கவிதைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டன எனத் தெரிவித்துள்ளார்.
Spread the love