Home இலங்கை முகமாலை காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு

முகமாலை காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று 02-12-2016 (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
mukamaalai-1
கடந்த 2000ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளே இன்றைய தினம் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்திராபுரம் பிரதேசத்தில் 14 குடும்பங்களின் 25 ஏக்கர் காணியும், முகமாலையில் 55 குடும்பங்களுக்கான ஆயிரத்து 800 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
mukamaalai-2
இன்றைய தினம் விடுவிக்கப்படும் காணிகள், காணி உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளில் விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி யுத்த காலத்தில் யுத்தத்தில் ஈடுப்பட்ட இரண்டு தரப்பினா்களினதும் யுத்த களமாக காணப்பட்ட பிரதேசமாக இருந்தமையினால்  பெருமளவு கண்ணிவெடிகள், மிதிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிப்பொருட்கள் என்பன நிறைந்த பிரதேசமாக காணப்பட்டது.

mukamaalai-5

இந்த பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஈடுப்பட்ட நிறுவனங்கள் கடந்த காலங்களில் மிகப்பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து தங்களது பணியை முன்னெடுத்திருந்தனா். இதன் போது சில பணியாளா்கள் பலியாகியும் இருந்தனா்.

தற்போது குறித்த பகுதிகள் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினால் உத்தியோகபூா்வமாக மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டு இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

15271187_1773266612935669_1233340306_o 15271301_1773207492941581_1668247436_o mukamaalai-4  mukamaalai-6

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More