திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் கருணாநிதியின் முக்கிய உறுப்புகள் செயலிழந்து வருகின்றன என்றும் மாலை 4.30 மணிக்கு வெளியாகியுள்ள காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் பெரிய அளவில் நலிவடைந்து இருக்கிறது.காவேரி மருத்துவமனையில் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு தற்போது சுவாசிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
தி.மு. கவின் தலைவர் மு. கருணாநிதியின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு திமுக.வினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அப்பா எப்படி இருக்கிறார்ம்மா என்ற கேள்விக்கு கனிமொழி கண்கலங்கியநிலையில் அமைதி காத்துள்ளார்..
மு. கருணாநிதியின் புதல்வர்கள் மு.க ஸ்ராலின் – மு.க. அழகிரி ஆகியோர் முதலமைச்சரை சந்தித்துள்ளனர்.
20 நிமிட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் எதிர்வரும் 2 நாட்களுக்கு தமிழக அரசின் உத்தியோகபூர்வ நிகழ்வுகளை பிற்போடுமாறு கோரப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
அடுத்து ஒரு சில நாட்களில் காவேரி மருத்துவ மனைக்கு செல்ல உள்ள முக்கிய இந்திய தலைவர்களின் பெயர்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொறியியலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி உள்ளார்.
மெரினா கடற்கரையில் புதிதாக நினைவிடங்கள் அமைக்கக்கூடாது என வழக்கறிஞர் காந்திமதி என்பவர் சென்னை உச்ச நீதிமன்றில் தொடர்ந்த, வழக்கு இன்று திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் திடீரென அதிரப்படையினர்.. குவிக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் பதட்டத்தில் உள்ளனர்.
தமிழக காவற்துறையினரும் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.வெளிமாவட்ட காவற்துறை அதிகாரிகளை சென்னை திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனையின் இறுதி அறிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது…