இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145க்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அலகில் 6.8 மற்றும் 7 ஆகப் பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தின் போது ; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் மீளப்பெறப்பட்டிருந்தது.
சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கின்ற லாம்போக் தீவில் உள்ள 80 சதவீதமான வீடுகள் நில நடுக்கத்தால் சேதமடைந்துள்ளதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.லாம்போக் தீவு முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட் டுள்ளது. பாலங்கள் இடிந்து விழுந் துள்ளதால் வீதிப்போக்குவரத்து முடங்கியுள்ளதுடன் தொலைத் தொடர்பு சேவைகளும் பாதிக்கப் பட்டுள்ளன.சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள் ளனர்.