உலகம் பிரதான செய்திகள்

எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை வடகொரியா விடுதலை செய்துள்ளது


சட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை வடகொரியா விடுதலை செய்துள்ளது. தென் கொரியாவை சேர்ந்த 34 வயதான சியோவ் என்பவர் கடந்த ஜூலை மாதம் 22ம்திகதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தமையினால் கைது செய்யப்பட்டிருந்தார்.  இந்நிலையில் அவரை நேற்றையதினம் வடகொரியா விடுதலை செய்துள்ளது.

சியோவை வடகொரியா விடுதலை செய்தமையை சாதகமான அறிகுறியாக எடுத்துக்கொண்டு ள்ள தென்கொரியா வடகொரியாவில் பல்லாண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த மேலும் 6 கைதிகளை விடுவிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

கொரியப்போருக்கு பின்னர் வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே காணப்பட்டு வந்த பகை நிலைமை மாறி இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான சூழல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.