குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் பொது மக்கள் பற்றி கவனம் செலுத்துவதில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ள அவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் நலன்களை உறுதி செய்வதில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகவும், பொதுமக்களை உதாசீனம் செய்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கு வீணாக செலவிட்டு அப்பாவி பொதுமக்களை உதாசீனம் செய்வதானது அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு முடிவு கட்டிவிடும் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கில் மக்கள் உணவின்றி வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகள் வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் தெரிவித்துள்ளார். தேவையற்ற செலவுகளை குறைத்து அரசாங்கம் மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.