முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 12 ஆம் திகதி கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்திசிறிஸ்கந்தராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற கடறதொழில்களால் தமது வாழ்வாதாரத்தொழில் முழுமையாகப்பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்திவு மாவட்ட மீனவர்கள் கடந்த 2 ஆம் திகதி முதல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுந்தனர்.
இச்சம்பவத்தையடுத்து கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் இனிகே ஜனக பிரசன்ன குமாரவினால் நேற்று 8 ஆம் திகதி எதிர்கட்சித்தலைவர் இராசம்பந்தன் கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா ஆகியோரின் பங்குவற்றுவதலுடன் அமைச்சின் செயலத்தின் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், குறித்த சந்திப்பு நேற்று நடைபெறவில்லை.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா விடம் கேட்டபோது, குறித்த சந்திப்பு, நேற்று நடைபெறவில்லை என்றும் அமைச்சர் எதிர்வரும் 12 அம் திகதி முல்லைத்தீவுக்கு பயனித்து நேரில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.