Home இலங்கைதமிழக மீனவர்கள் 27 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்…

தமிழக மீனவர்கள் 27 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்…

by admin

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சபேஷன் உத்தரவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் பகுதிளைச் சேர்ந்த 27 தமிழக மீனவர்கள் கடந்த 11 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, நெடுந்தீவுக்கு தென்கிழக்கு பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் 27 பேரையும் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சபேஷன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந் நிலையில் விளக்கமறியல் காலம் நிறைவுற்று மீண்டும் அவர்கள் இன்று நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More