Home இலங்கைஆவாக்கள், தனுரொக்கள், விக்டர்கள் என்ற சந்தேகத்தில் 50 பேர் கைது…

ஆவாக்கள், தனுரொக்கள், விக்டர்கள் என்ற சந்தேகத்தில் 50 பேர் கைது…

by admin


யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஓகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் நடத்தப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஆவா, தனுரொக், விக்டர் என, அட்டகாசக் குழுக்கள், பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவது குறித்து காவற்துறை நிலையங்களில் முறைப்பாடுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் ஆகிய பகுதி பகுதிகளில் அதிகாரிகளின் விடுமுறைகள் கடந்த தினங்களில் இரத்து செய்யப்பட்டு விஷேட தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More