சமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் சமகால அரசியல் யாப்பு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது என உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் அரசியலமைப்பின் மீதான 19 ஆவது திருத்தம் மூன்றாவது தடவையாக ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவிடயம் தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு எனவும் குறிப்பிட்டுள்ள அவர் உயர் நீதிமன்றத்திடம் கோரப்படும் எவ்வித விளக்கமும் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தகுதிகாண் தன்மையை எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.