Home இலங்கைமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு…

முன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு…

by admin

முன்னைய அரசாங்கத்தின் பல முக்கிய உறுப்பினர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தனர் என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தள்ளார்.

கடந்த மூன்று வருடகால ஆட்சியின் போது இலங்கையை ஜனநாயகம் நிலவும் சுதந்திர நாடாக நல்லாட்சி அரசாங்கம் மாற்றியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் குற்றச்செயல்களின் அளவை குறைத்துள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் கடந்த மூன்று வருட காலப்பகுதியில் பாலியல்வன்முறை மற்றும் கொலைகள் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ச காலத்தில் 600 ஆக காணப்பட்ட கொலைகளை 400ஆக குறைத்துள்ளதாகவும் சிறுவர் துஸ்பிரயோகம் கொள்ளை போன்ற சம்பவங்களும் குறைவடைந்துள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More