குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
காவல்துறை மா அதிபர் இன்று பாராளுமன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளார். தெவினுவர முன்னாள் பஸ்நாயக்க நிலமே டிசான் விக்ரமரட்ன கைது செய்யப்பட மாட்டார் என தொலைபேசி மூலம் அளித்த வாக்குறுதி குறித்து இன்றையை தினம் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விளக்கம் கோரப்பட உள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, காவல்துறை மா அதிபரை நாடாளுமன்றிற்கு அழைத்துள்ளார்.இந்த சந்தர்ப்பத்தின் போது துறைசார் அமைச்சரான சாகல ரட்நாயக்கவும் அழைக்கப்பட உள்ளார்.
இந்த விடயம் குறித்து பாராளுமன்றில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் விளக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மா அதிபரை அழைத்த விளக்கம் கோருவதன் மூலம் இது தொடர்பிலான சர்ச்சைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.