பாகிஸ்தானில் ஜனாதிபதி , பிரதமர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதித்து பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி , பிரதமர், தலைமை நீதிபதி, பாராளுமன்ற மேலவை மற்றும் கீழவை தலைவர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதென அந்நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
ராணுவ தளபதி எப்போதும் சாதாரண வகுப்பில் தான் பயணம் செய்வார் எனவும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கு சிறப்பு விமானத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும் பிரதமர் முடிவு செய்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.