Home இந்தியாஉச்ச நீதிமன்றத்திலும் ஊழல் உள்ளது – பிரசாந்த் பூஷன்

உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் உள்ளது – பிரசாந்த் பூஷன்

by admin

உச்ச நீதிமன்றத்திலும் மிகப் பெரிய அளவில் ஊழல் உள்ளதாக சிரேஸ்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்துள்ளது என ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற போதிலும் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவருகிறது.

இதுதொடர்பாக செய்தியர்கள்களிடம் :கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற சிரேஸ்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் எந்த ஒரு வழக்கையும் தொடுப்பதற்கு முன்னதாக அங்கு மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருவதை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானம் வாங்கியதில் 36 ஆயிரம் கோடி ரூபா ஊழல் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து தான் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் ஏனெனில், உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், ரபேல் விவகாரம் தொடர்பில் அனைத்து தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வழிகளை தேர்வு செய்துவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை மிகவும் வீரியத்துடன் மக்களிடம் எடுத்து செல்வது பாராட்டுக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More