கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் நாளை திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளர்.
மேலும் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன் கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் விமான நிலையமும் கடந்த 15-ம் திகதி மூடப்பட்டது. கொச்சி கடற்படை தளத்தில் இருந்து மட்டும் ஒருசில விமானங்கள் இயக்கப்பட்டன.
கடந்த 26-ம் திகதி விமான நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்ட போதும் ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு அழைத்து வருவது உள்ளிட்ட சில சிக்கல்கள் காரணமாக மேலும் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் விமான சேவை தொடங்கும் என்று விமான நிலையம் அறிவித்துள்ளது. விமான நிலையம் மூடப்பட்டதால் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது