அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கறுப்பின சிறுவனைக் கொலை செய்த வழக்கில் அம்மாநில முன்னாள் காவல்துறையினருக்கு 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தின் நகர் ஒன்றிலுள்ளள்ள ஒரு வீட்டில் சிறுவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மதுவிருந்தில் பங்கேற்றிருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு சென்றவேளை சிறுவர்கள் சிலர் ஒரு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த காரை நிறுத்த முயன்றும் கார் நிற்காமல் சென்றதால், துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் எர்வர்ட்ஸ் என்ற 15 வயது கறுப்பின சிறுவன் உயிரிழந்தார். .
கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஒலிவர் எனப்படும் 38 வயதான காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டதுடுன்பணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இவ்வழக்கில் வாதப்பிரதிவாதங்கள், சாட்சியங்களிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில் ஒலிவர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது