இடைக்கால அறிக்கை கூறுகிறது…
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலும், அவர்களின் உறவினர்கள் சார்பிலும் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை காணாமல்போனோருக்கான, அலுவலகம் எதிர்வரும் புன்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கையில்
காணாமல்போனோரின் உறவினர்கள் உண்மையை அறிந்துகொள்வதற்கு உள்ள உரிமை மறுக்கப்படக் கூடாது.
காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பிலான சர்வதேச பரிந்துரைகளை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.
காணாமலாக்கப்படுதலை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்க வேண்டும்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் காலப்பகுதியில்,
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான இடைக்காலக் கொடுப்பனவை வழங்க வேண்டும்.
காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு நலன்புரி உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் வேண்டும்
அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுத்தல் வேண்டும்
போன்ற பரிந்துரைகள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.