Home இந்தியாமேற்கு வங்த்தில் சிறு குழந்தைகளின், 14 எலும்புக்கூடுகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்து மீட்பு…

மேற்கு வங்த்தில் சிறு குழந்தைகளின், 14 எலும்புக்கூடுகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்து மீட்பு…

by admin


மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் பிளாஸ்டிக் பைகளில் இருந்து, சிறு குழந்தைகளின் 14 எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹரிதேப்பூர் பகுதியில் ராஜா ராம்மோகன் ராய் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றபோது குழந்தைகளின் சடலங்கள் கண்டுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஹரிதேப்பூர் காவல் நிலைய சிரேஸ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’ கண்டு பிடிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளின் சடலம் முற்றிலும் அழுகிய நிலையிலும், சில குழந்தைகளின் உடல்கள் பாதி அழுகிய நிலையிலும் உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஆதாரங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜி மற்றும் மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் சென்று அப்பகுதியை பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More