Home இலங்கைநல்லூர் மகோற்சவ திருவிழாவின், கார்த்திகை திருவிழா… 

நல்லூர் மகோற்சவ திருவிழாவின், கார்த்திகை திருவிழா… 

by admin

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் கார்த்திகை திருவிழா  இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாவின் 18ஆம் திருவிழாவான கார்த்திகை திருவிழாவின் போது , ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

மாலை 05 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , தீபந்தங்கள், கற்பூர சட்டிகள் சூழ ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.

கார்த்திகை திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருட்காட்சியை கண்டு களித்தனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More