Home பிரதான செய்திகள்4-வது போட்டியில் வென்று இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது

4-வது போட்டியில் வென்று இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது

by admin

சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற இங்கிலாந்து – இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றுள்ளதன் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் முதல் இன்னிங்சில் 246 ஓட்டங்களை எடுத்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இந்தது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ஓட்டங்களை பெற்று 27 ஓட்டங்கள் முன்னிலையில் காணப்பட்டது. இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 271 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்காக இந்தியாவிற்க்கு 245 ஓட்டங்களை நிர்ணயித்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 184 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து வி;க்கெட்டுக்களையும் இழந்து தோல்வியினைச் சந்தித்தது. இதனையடுத்து இங்கிலாந்து 3-1 என தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More