காஷ்மீரில் காவல்துறையினருக்கெதிராக நேற்றையதினம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தின் சோபியான்னில் உள்ள இமாம் சாஹிப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலினையடுத்து இந்திய ராணுவம், மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்து நேற்று அதிகாலையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து இருதரப்பினரிடையேயும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கைக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் காவல்துறையினர் மீது கற்களை வீசி எறிந்துள்ளனர்.
இதனையடுத்து கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதனால் பலர் காயம் அடைந்தனரர் எனவும் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது