இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் 450கிராம் கொண்ட பாணின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது. தற்போது 60 ரூபா விற்பனை செய்யப்படும் பாணின் புதிய விலை 65 ரூபா ஆகும்.
இதேவேளை செப்டம்பர் 1ஆம் திகதி முதல் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது. 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 100 ரூபாவாக தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.
உலக சந்தையில் விலை உயர்வடைந்தமை மற்றும் டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை ஆகிய விடயங்கள் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே பாணின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றது.