இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2005ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆர்.பி.சிங் 2007ம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தினை இந்திய அணி கைப்பற்றுவதற்கு முக்கிய பங்காற்றியிருந்தார். 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளையும் ம், 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ருவிட்டர் பகத்தில் தெரிவித்துள்ள அவர் தன்னுடைய கிரிக்கெட் பயணம் இனிமையானதாகவும் மறக்க முடியாத நினைவுகள் கொண்டதாகவும் இருக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.