Home உலகம்மெக்சிகோவில் ஒரே இடத்தில் 166 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுப்பு

மெக்சிகோவில் ஒரே இடத்தில் 166 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுப்பு

by admin


மெக்சிகோவின் வெராகிரஸ் (Veracruz ) என்ற மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை புலனாய்வாளர்களால் ஒரே இடத்தில் குறைந்தது 166 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடம் எது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் அடாவடித்தனங்கள் அதிகமாக காணப்படுகின்ற நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களால் கொல்லப்பட்டவர்களை புதைப்பதற்கான இடமாக வெராகிரஸ் மாகாணத்தை பயன்படுத்துவது வழக்கமென தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் அப்பகுதியில் இவ்வாறு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2017 மார்ச் மாதமளவில் அங்கு ஓரிடத்தில் சுமார் 250 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்படட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More