Home உலகம்அமெரிக்காவில் வங்கி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு – இருவர் காயம்

அமெரிக்காவில் வங்கி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு – இருவர் காயம்

by admin


அமெரிக்காவின் ஒக்கிகோ மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.  ஒக்கிகோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்றையதினம் இந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வங்கியில் இருந்த வாடிக்கையாளர்களை நோக்கி குறித்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இதன்Nடீபாது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தற்காப்புக்காக அவரை நோக்கி சுட்டதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More