ஒவ்வொரு ஆண்டும் உலகில் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ம் திகதி தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகின்ற நிலையில் அத்தினத்தையொட்டி உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தற்கொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு பொதுநல இயக்கங்கள் தற்கொலை எதிர்ப்பு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றநிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வறிய மற்றும் நடுத்தர வர்க்க நாடுகளில்தான் தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் சமூக அழுத்தங்கள், ஏற்றத்தாழ்வுகளும் தற்கொலைகளுக்கு தூண்டுதலாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.