Home பிரதான செய்திகள்ஆசியக் கிண்ணத் தொடரில் தினேஷ் சந்திமால் பங்கேற்க மாட்டார்

ஆசியக் கிண்ணத் தொடரில் தினேஷ் சந்திமால் பங்கேற்க மாட்டார்

by admin


எதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் தினேஷ் சந்திமால் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மையில் முடிவடைந்த உள்ளூர் இருபதுக்கு இருபது தொடரில் அவரது வலது கையின் நடு விரலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே ஆசியக் கிண்ணத் தொடரில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினால் வெளியிடப்பட்ட ஆசிய கிண்ணப் போட்டிகளில் விளையாடும் இலங்கை அணியில் சந்திமாலின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும் அவரது கையில் ஏற்பட்டு உபாதை பூரணமாக குணமடையாத காரணத்தினால் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More