187
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலி ராஜ் அதிக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார். ஐசிசி பெண்கள் சம்பியன்சிப் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்டையிலான ஒருநாள் போட்டி காலி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் இடம்பிடித்திருந்த மிதாலி ராஜ்{க்கு இது 118-வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். இதன்மூலம் அதிக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் எட்வர்ட்ஸ் 117 போட்டியில் விளையாடி சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love