இந்தியா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமியின் அழைப்பில் டெல்லி சென்ற மகிந்த ராஜபக்ஸ இன்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சந்தித்துப் பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார்.
020 தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து அரசயல் நகர்வுகளை முன்னெடுக்கும் மகிந்த ராஜபக்ஸ, தனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஸவை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெறுவது எனற இலக்கில் உறுதியான நம்பிக்கையுடன் நடை போடுகிறார்.
தேர்தல் வியூகங்களோ, உள்நாட்டில் மக்கள் ஆதரவுகள் மட்டும் தமது வெற்றியைத் தீர்மானிக்காது என்பதிலும், வெற்றிபெற்றாலும் ஆட்சியை தொடர்வதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதிலும், குறிப்பாக பிராந்திய அரசியல் செல்வாக்கு செலுத்தும் என்பதை நடைமுறையில் அனுபவித்தவர் என்ற வகையில், ராஜதந்திர வியூகங்களையும் வகுத்து முனைப்புடன் செயற்படுகிறார் மகிந்த.
அதன் பிரதான முன் நகர்வே சுப்ர மணியசாமி ஊடான நிகழ்வுகளின் ஏற்பாடும், ஊடக பிரசித்தப்படுத்தல்களும், ஏற்கனவே திட்டமிட்ட ஊடக நேர்காணல்களும் என தெரிவிக்கப்படுகிறது.